search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்"

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #TelanganaAssemblyElections #Congress
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.

    தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ஹுசூர் நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி பத்மாவதி மீண்டும் கோகட் தொகுதியில் போட்டியிடுகிறார். 

    சர்வே சத்யநாராயண எம்.பி செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியிலும், பூனம் பிரபாகர் கரீம் நகரிலும், பல்ராம் நாயக் மெகபூபாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். #TelanganaAssemblyElections #Congress 
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 155 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். 

    மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, டிசம்பர் 11ம் தேதி நடைபெற்று அன்றைய தினமே, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.



    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி  வெளியிட்டுள்ளது. 

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 155 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளோம். அஜய் சிங், முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பச்சோரி, முன்னாள் முதல் மந்திரி திக்விஜய் சிங்கின் மகன்ஜெய்வர்தன் சிங் மற்றும் லஷ்மண் சிங் உள்பட பலரும் இந்த பட்டியலில் அடங்குவர் என தெரிவித்துள்ளது. #MadhyaPradeshElections #Congress
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #BJP
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 18 தொகுதிகளில் நவம்பர் 12ம் தேதியும், 72 தொகுகளில் 20ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.



    இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், 77 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். முதல் மந்திரி ராமன் சிங் ராஜ்நந்தகாவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 14 பேர் பெண்கள். 14 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதேபோல், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 38 பேர் கொண்ட பட்டியலையும், மிசோரமில் போட்டியிடவுள்ள 13 பேர் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. #ChhattisgarhElections #BJP
    ×